தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள்

1 month ago 7

 

பெரம்பலூர், அக்.14: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மளிகைப் பொருட்களும் ரேஷன் கடையில் குறைந்த விலையில் கிடைத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூரில் நடைபெற்ற மார்க். கம்யூ. கட்சியின் ஒன்றிய 2வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் நகராட்சி, துறைமங்கலம், 3 ரோடு அருகே உள்ள சீதாராம் எச்சூரி நினைவகத்தில் நேற்று (13ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை மார்க். கம்யூ. கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய 2 வது மாநாடு நடை பெற்றது.

இந்த மாநாட்டிற்கு ஒன்றிய கமிட்டி உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். கட்சி கமிட்டி உறுப்பினர் அரவிந்த் வரவேற்றார். ஒன்றிய கமிட்டி உறுப்பினர் ஜெயலட்சுமி கொடியேற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி கலந்துகொண்டு துவக்கவுரையாற்றினார். கட்சியின் ஒன்றிய செயலாளர் கருணாநிதி வேலை அறிக்கை வாசித்தார். கட்சி உறுப்பினர்கள் முருகேசன், ரஜினிகாந்த், ரவி ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.

மார்க். கம்யூ. கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் செல்ல துரை கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்.இந்த மாநாட்டில், கவுல் பாளையம் நகர்ப்புற குடியிருப்பில் அடிப்படை வசதி, பஸ் நிறுத்தம், அங்கன்வாடிமையம், ரேஷன் கடை ஆகியவற்றை உடனடியாக அமைத்திட வேண்டும். எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் 180 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்கிட வேண்டும். தெரு விளக்கு அனைத்தையும் சரி செய்திட வேண்டும்.

வடக்குமாதேவி ரோடு சமத்துவபுரம் ஏரிக்கரை பகுதியில் குடியிருக்கும் சுமார் 300குடும்பங்களுக்கு பாதை வசதி செய்து தர வேண்டும். சாலையை சரி செய்து தெருவிளக்கு சரி செய்ய வேண்டும். ஆலம்பாடி கிராமத்திற்கு 100 நாட்கள் வேலை உடனடியாக வழங்கிட வேண்டும் மத்திய,மாநில அரசுகள் டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மளிகை பொருட்களும் ரேஷன் கடையில் குறைந்த விலையில் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் காவல் நிலையத்தில் பொது மக்கள் கொடுக்கக்கூடிய அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப் பட்டன.இதில் மார்க்.கம்யூ. கட்சியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும்கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் பெரியசாமி நன்றி தெரிவித்தார். 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் தேசிய கல்வி உதவித் தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number மற்றும் Password பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் appeared first on Dinakaran.

Read Entire Article