தீபாவளி பண்டிகைக்காக ஜரிகை சேலை உற்பத்தி மும்முரம்

3 months ago 19

சேலம்: சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியாவில் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆவணி மாதத்தில், பத்துக்கும் மேற்பட்ட முகூர்த்தங்கள் வந்ததால், ஜரிகை சேலைகளின் விற்பனை களைகட்டியது. இந்த நிலையில், வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து முகூர்த்தங்கள் வருவதால், ஜரிகை சேலைகளின் தேவைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஜரிகை சேலைகளின் உற்பத்தியை உற்பத்தியாளர்கள் வேகப்படுத்தியுள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த ஜரிகை ேசலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் சேலம், காஞ்சிபுரம், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிஜினல் பட்டு சேலை, வேஷ்டியும், இளம்பிள்ளை, நங்கவள்ளி, தாரமங்கலம், பாப்பம்பாடி, இடங்கணசாலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்பட பல பகுதிகளில் அபூர்வா, சாமுத்ரிகா, மெசரைஸ் காட்டன், பியூர் காட்டன், சில்க் காட்டன், தானா பட்டு, கரீஷ்மா, கல்யாணி காட்டன், மோனா காட்டன், கோட்டா காட்டன், எம்போஸ், பிக்கன்பிக் உள்ளிட்ட சேலைகள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் மதிப்பில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள், தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும், அமெரிக்கா, லண்டன், துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு ஜரிகை சேலைகளின் உற்பத்தி 30முதல் 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தீபாவளி பண்டிகைக்காக ஜரிகை சேலை உற்பத்தி மும்முரம் appeared first on Dinakaran.

Read Entire Article