தீபாவளி பண்டிகை; சென்டிரல் - அம்பாலா கண்டோன்மென்ட் இடையே சிறப்பு ரெயில்

2 months ago 14

சென்னை,

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து இன்று(28-ந்தேதி), நவம்பர் 4, 11 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு அம்பாலா கண்டோன்மென்ட் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில்(வண்டி எண்.06097), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 2.10 மணிக்கு அம்பாலா கண்டோன்மென்ட் சென்றடையும். மறுமார்க்கமாக, அம்பாலா கண்டோன்மென்டில் இருந்து வரும் 30, நவம்பர் 6, 13 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில்(06098), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மதியம் 1.35 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article