தீபாவளி: டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்

2 weeks ago 6

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகரான டெல்லியில் அதிகாலை முதலே அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது.

டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் அதிகபட்சமாக காற்றின் தரம் 419 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அயா நகர் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 308 ஆகவும், ஜஹாங்கீர்புர் பகுதியில் 395 ஆக இருந்தது. இங்கு காற்றின் தரம் மிகவும் மோசமான நிலை எட்டியுள்ளதாக தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது. இந்த அதிக காற்று மாசுபாடானது மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் உடல் ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

டெ மக்கள் அனைவரும் பட்டாசுகளை வெடிப்பதற்கு பதிலாக வீடுகளில் விளக்குகளை ஏற்றி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். காற்றின் தரம் மோசமடைவதால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்குமாறு டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

AQI அளவுகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. "மோசமானது" (AQI 201-300), "மிகவும் மோசமானது" (301-400), "கடுமையானது " (401-450), மற்றும் "கடுமையாகத் தீவிரமானது" (450க்கு மேல்) என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article