தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை மறுநாள் ஆலோசனை

1 month ago 7

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்.31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தையை நாட்கள் 29,30 ஆகிய தேதிகளில் பலரும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளனர். வரும் 15ம் தேதி தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு அன்றைய தினமே சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்தும், பிற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு இதுவரை 60 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

The post தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை மறுநாள் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article