தீபக் சாஹரை பேட்டால் அடிக்க பாய்ந்த தோனி - வைரலாகும் வீடியோ

4 weeks ago 8

மும்பை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விடுமுறை தினமான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா-சாவா போன்றது என்பதால் வெற்றிக்காக வரிந்துகட்டி நிற்பார்கள். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்த தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனியிடம் மும்பை வீரர் தீபக் சாஹர் ஏதோ கூறி விளையாட்டாக வம்பிழுத்துள்ளார். இதையடுத்து, தோனி பேட்டால் தீபக் சாஹரை அடிக்க பாய்ந்தார். தொடர்ந்து இருவரும் ஜாலியாக உரையாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Making merry with Namma Cherry! ✨#MIvCSK #WhistlePodu pic.twitter.com/Ooevfs9Img

— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2025



Read Entire Article