சிவகாசி, மே 8: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க் கரையில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கழிப்பறையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி திமுக கவுன்சிலர் துறைப்பாண்டியன் நேற்றுமுன்தினம் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சமாதானம் ஆனார். இந்நிலையில் தன்னை பணி செய்யவிடாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக திருத்தங்கல் விஏஓ குருபாக்கியம், திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் துறைப்பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.