சின்னசேலம், பிப். 14: கச்சிராயபாளையம் அருகே கூரைவீடு தீப்பற்றி எரிந்ததில் ரூ4லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மணிகண்டன்(30). இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். இவர் ஊர்க்காவல் படையில் கடந்த 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவியது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து வெடிக்காமல் இருக்க ஏரியில் வீசினார்கள். அப்படியிருந்தும் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், நில பத்திரங்கள், துணிமணிகள், ரொக்கபணம் ரூ35,000, மற்றும் நகைகள் என ரூ4லட்சம் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து குறித்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தீ விபத்தில் வீடு எரிந்து நாசம் ரூ4 லட்சம் பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.