திலகபாமாவை சந்திக்க ராமதாஸ் மறுப்பு: அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்க குடும்பத்தினர் வலியுறுத்தல்

1 week ago 3

தைலாபுரம்: அன்புமணிக்கு மீண்டும் பாமக தலைவர் பதவியை வழங்க வேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இளைஞர் அணி தலைவர், அதிமுக, பாஜக கூட்டணி விவகாரத்தில் அப்பா- மகன் மோதல் முற்றியது. இதையடுத்து பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பாமக தலைவராக இனி நானே செயல்படுவேன் என்று ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் பாமக நிர்வாகிகள் ராமதாஸை சந்திக்க சென்றனர். அப்போது தைலாபுரம் இல்லத்துக்கு சென்ற பாமக பொருளாளர் திலகபாமாவை சந்திக்க ராமதாஸ் மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க மறுத்ததாக கூறப்படும் நிலையில் திலகபாமா காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு, அன்புதானே எல்லாம் என திலகபாமா பதிவிட்டிருந்தார். தொடர்ந்து ராமதாஸ் உடன் குடும்ப உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அன்புமணிக்கு மீண்டும் பாமக தலைவர் பதவியை வழங்க வேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து ராமதாஸ் உடன் அவரது மகள்கள் காந்திமதி, கவிதா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

பாமக பொருளாளர் திலகபாமாவை சந்திக்க மறுத்த ராமதாஸ், மற்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராமதாஸ் உடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

The post திலகபாமாவை சந்திக்க ராமதாஸ் மறுப்பு: அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்க குடும்பத்தினர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article