திரையரங்குகளில் திருட்டுத்தனமாகப் படங்களை பதிவு செய்தது எப்படி..? பகீர் வாக்குமூலம் அளித்த கைதான "தமிழ் ராக்கர்ஸ்" நிர்வாகிகள்

3 months ago 22
கேரள சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் நிர்வாகிகள் குமரேசன், பிரவீன்குமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திரையரங்குகளில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். முக்கியத் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் படுத்துக் கொண்டே திரைப்படம் பார்க்கும் வகையிலான ரிக்ளைனர் சீட்டுகள் கொண்ட திரையரங்குகளில் நடு வரிசையில் 5 இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வரிசையாக அமர்ந்திருக்கும் 5 பேரில், நடுவில் அமர்ந்திருப்பவர் போர்வையால் தன்னை மூடிக் கொண்டு கேமராவை அதனுள் வைத்து விடியோ பதிவு செய்து வந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Read Entire Article