அரசு உதவி மருத்துவர் பணி நியமனம்: 400 பேரின் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

3 hours ago 2

சென்னை: அரசு உதவி மருத்துவர் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 400 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 2,642 அரசு உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு மருத்துவ தேர்வு வாரியம் கடந்த ஜன.5 அன்று தேர்வு நடத்தி இறுதி தகுதிப் பட்டியலை வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 400 பேர் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 2024 ஜூலை 15-ம் தேதிக்கு முன்பாக நிரந்தரமாக பதிவு செய்யவில்லை எனக் கூறி அவர்களை தகுதிப் பட்டியலில் இருந்து மருத்துவ தேர்வு வாரியம் நீக்கியது.

Read Entire Article