திரைப்பட வசனம் போல் அரசியலில் பேசக்கூடாது: விஜய்க்கு முத்தரசன் கடும் கண்டனம்

2 days ago 4

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டம், அதியமான் அரண்மனையில் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டின் 9 பிரச்னைகள் குறித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பேசினாரா?, அதற்கு அமித்ஷா என்ன பதில் சொன்னார் என்பதை அவர் பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறதா இல்லையா? என்று தீர்மானிக்கிற அதிகாரம் விஜய்க்கு கிடையாது. எங்களுடைய போராட்டங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள். எங்கள் கட்சிக்கு இன்னொரு கட்சி நற்சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை.

மன்னராட்சி என்று சொன்னால், விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்க முடியாது. புரிதல் இல்லாமல், திரைப்படத்தில் வசனம் பேசுவது போல், அரசியலில் பேசக்கூடாது. ஆயிரம் கோடி ஊழல் கூறிய அமலாக்கத்துறையை பார்த்து, உயர் நீதிமன்றம் பொய் சொல்லாதே என்று கூறுகிறது. ஊழல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை நேர்மையாக செயல்படவில்லை. ஒன்றிய அரசின் ஏவலாளியாக அது செயல்படுகிறது. எங்களுக்கு நிரந்தர எதிரி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ தான். 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும். ஸ்டாலின் தான் முதல்வராக வருவார். இவ்வாறு கூறினார்.

The post திரைப்பட வசனம் போல் அரசியலில் பேசக்கூடாது: விஜய்க்கு முத்தரசன் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article