திருவொற்றியூர், பிப்.13: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் வாசலில் உள்ள ஆதிஷேச தீர்த்த திருக்குளத்தில் ஆண்டுதோறும், தைப்பூசத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். இரு மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக குளத்தில் மழைநீர் பெருமளவில் தேங்கியதால் இந்த ஆண்டு தெப்ப உற்சவம் நடத்த கோயில் உதவி ஆணையர் நற்சோனை தலைமையில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 20க்கு 20 அடி அகலத்தில், தெப்பம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவர் சந்திரசேகரர் திரிபுர சுந்தரி தாயார் எழுந்தருளி, நீராழி மண்டபத்தை 5 முறை சுற்றி வந்தது. அப்போது குளத்தின் நான்கு புறமும் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஒற்றீயூரா, தியாகேசா என பக்தி கோஷம் எழுப்பினர். மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
The post திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.