திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

3 months ago 15

சென்னை,

ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகர் முதல் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் இருந்து கையில் பையுடன் வாலிபர் ஒருவர் இறங்கி நடைமேடையில் சந்தேகம்படும்படி நடந்து சென்றார்.

அப்போது ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் 14 கிலோ கஞ்சாவை பேக்கில் வைத்து அவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை கைது செய்த ரெயில்வே போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட வாலிபர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது 34) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article