திருவொற்றியூர் தனியார் பள்ளி மீண்டும் திறப்பு

2 months ago 13

சென்னை: திருவொற்றியூரில் உள்ள விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதியும், நவம்பர் 4-ம் தேதியும் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகளுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியும் காரணம் தெரியவில்லை. இதையடுத்து, பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், பெற்றோருடன் வருவாய் கோட்டாட்சியர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, பள்ளி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவிகள் மட்டும் வந்தனர். படிப்படியாக இதர மாணவிகளுக்கு வகுப்பை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article