திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்கு உட்பட்ட கார்கில் வெற்றி நகர் பகுதியில் உள்ள பல தெருவிளக்கு கம்பங்கள் பழுதடைந்து, மின்விளக்கு எரியாமல் இருந்தது. இதனால், இரவில் இருள் சூழ்ந்து பொதுமக்கள் சிரமப்பட்டனர். எனவே, இந்த தெருவிளக்கு கம்பங்களை புதிதாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, இதற்காக ₹27.01 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் கார்கில் வெற்றி நகர், சிப்பாய் வடிவேல் தெரு உள்ளிட்ட 7 தெருக்களில் 74 தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்காக பூமி பூஜை, கார்கில் நகரில் நடந்தது. மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ தெருவிளக்கு பணிக்கு அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமிர்தராஜ், வட்ட செயலாளர் கார்த்திகேயன், மகளிர் அணி கோமளவல்லி மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.