நாகப்பட்டினம், மே 9: நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மண்டல இணைப்பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முத்துக்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மே 9ம் தேதி பணியாளர் தினம் கூட்டம், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கி வரும் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், சென்னை அவர்களது கட்டுப்பாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் அனைத்து நிலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்கள் ஆகியோர், தங்களது பணி தொடர்பாக குறைகள் ஏதும் இருப்பின் அதன் விவரத்தை பணியாளர் குறைத்தீர்க்கும் வளைதள முகமையிலோ அல்லது பணியாளர் தினம் நடைபெற உள்ள நாளான 9ம் தேதி இணைப்பதிவாளர் அலுவலகத்தில், மண்டல இணைப்பதிவாளரிடம் நேரிலோ மனுவாக அளிக்கலாம். மேற்படி பணியாளர்கள் நாள் நிகழ்ச்சியினை கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வுப்பெற்ற பணியாளர்கள் பயன்படுத்திக்கொண்டு பலனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post நாகப்பட்டினத்தில் இன்று கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.