திருவொற்றியூரில் ₹10 கோடியில் நவீன மார்க்கெட் வளாகத்தை அதிகாரிகள் ஆய்வு

1 month ago 5

திருவொற்றியூர், நவ. 21:திருவொற்றியூர் மார்க்கெட் லைன் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மீன், இறைச்சி, காய்கறிகள், பழம் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதுமான அடிப்படை வசதி இல்லை. மேலும், இங்கு பயன்படுத்தப்படும் கழிவுநீர் சீராக வெளியே போக முடியாமல் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே அடிக்கடி தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மார்க்கெட் பகுதியை சுமார் ₹10 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் கட்டமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணி மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மார்க்கெட் பகுதி முழுவதும் சென்று வியாபாரிகளுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள், கட்டமைப்பு ஆகியவை குறித்து மாநகராட்சி அதிகாரியுடன் ஆலோசனை செய்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது செய்யப்பட்ட ஆய்வு அடிப்படையில் மார்க்கெட் கட்டுமானம் குறித்த திட்டவரைவு தயாரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகள் ஒப்புதலுடன் டெண்டர் விடப்பட்டு இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றனர். ஆய்வின்போது கவுன்சிலர் உமா சரவணன், செயற்பொறியாளர்கள் சகுபர் உசேன், பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post திருவொற்றியூரில் ₹10 கோடியில் நவீன மார்க்கெட் வளாகத்தை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article