திருவேற்காடு கோயில் ரீல்ஸ் விவகாரம்: மன்னிப்பு கேட்ட முன்னாள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர்

4 months ago 19

சென்னை: திருவேற்காடு கோயில் ரீல்ஸ் வீடியோ விவகாரத்தில், கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது, அக்கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த வளர்மதி, 12 பெண்களுடன் நடனமாடியது போன்ற ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Read Entire Article