திருவெறும்பூர் பகுதியில் பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

4 months ago 10


திருவெறும்பூர்: திருவெறும்பூர் பகுதியில் பள்ளி நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொடங்கியபடி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவெறும்பூர் பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிக்கு இரண்டு நிமிடத்தில் ஒரு புறநகர் பேருந்தும், ஐந்து நிமிடத்திற்கு ஒரு மாநகர் பேருந்தும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் திருவெறும்பூர் பகுதியில் பள்ளி நேரத்தில் போதிய அரசு பேருந்து இல்லாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தனியார் பேருந்தில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஏற்கனவே திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் இதுபோல் ஆபத்தான பயணத்தை மாணவர்கள் நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். பஸ்ஸில் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தாலும் அதைப்பற்றி மாணவர்கள் கவலைப்படாமல் இப்படி ஆபத்தாக பயணிக்கின்றனர். எனவே பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவெறும்பூர் பகுதியில் பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article