திருவிழாவிற்கு சென்றவர் வீட்டில் நகைகள் திருட்டு

1 day ago 4

திருமங்கலம், மே 14: திருமங்கலம் அருகே சித்திரை திருவிழா காண சென்றவர்களின் வீட்டை உடைத்து 6 பவுன் தங்கம் மற்றும் வெள்ளிபொருள்களை திருடிசென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள பாரைபத்தியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாண்டீஸ்வரி(26). கடந்த 11ம் இரவு ஆனந்தகுமார் தனது வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவை காண குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது இவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வைரமோதிரம் மற்றும் தங்கநகைகள் மற்றும் வெள்ளிபொருள்கள் மாயமாகியிருந்தன. யாரோ மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 6 பவுனாகும். இது குறித்து பாண்டீஸ்வரி கொடுத்த புகாரில் கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

The post திருவிழாவிற்கு சென்றவர் வீட்டில் நகைகள் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article