திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். ஏப்.7 திங்களன்று உள்ளூர் விடுமுறை என்பதால், குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்.8ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் அறிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.