திருவாரூர் நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.181 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்

2 hours ago 3

*வணிக வளாக திறப்பு விழாவில் அமைச்சர் தகவல்

*ரூ.17 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி

திருவாரூர் : திருவாரூர் நகராட்சியில் மட்டும் கடந்த 4 ஆண்டு காலத்தில் ரூ 181 கோடி அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நடப்பாண்டில் ரூ 17 கோடி மதிப்பில் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருவாரூர் நகர் பழைய தஞ்சை சாலையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி மூலம் ரூ 13 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிதாக காய்கறி மற்றும் பழ வணிக வளாகமானது கட்டப்பட்டுள்ளதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இந்த கட்டிடத்தின் திறப்பு விழாவானது நேற்று நடைபெற்றது.

கலெக்டர் மோகனசந்திரன் தலைமையிலும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.பி செல்வராஜ் மற்றும் எம்எல்ஏ பூண்டிகலைவாணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில் வரவேற்றார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய கட்டிடத்தினை திறந்துவைத்து பேசியதாவது, திருவாரூர் என்பது எங்களையெல்லாம் உருவாக்கிய முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் பிறந்த மண். திருவாரூர் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து தந்தவர் முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர்.கலைஞர். அந்தவழியில் செயல்படும் தற்பொழுதுள்ள தமிழக முதல்வர் மக்கள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

நான்காண்டில் திருவாரூர் நகராட்சியில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 18 பணிகளும், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேமம்பாட்டு திட்டத்தின் கீழ் 80 பணிகள் 20.169 கி.மீ நீளத்திற்கு ரூ.14 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலும், 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 57 பணிகள் ரூ.9 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலும், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 2 பணிகள் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது.

மூலதன மானிய நிதியின் கீழ் 3 பணிகள் ரூ.2 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டிலும், இயக்குதல் மற்றும் பராமரித்தல் நிதியின் கீழ் 4 பணிகள் ரூ.17 லட்சம் மதிப்பீட்டிலும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2 பணிகள் ரூ.ஒரு கோடியே 85 லட்சம் மதிப்பீட்டிலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் 7 பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகளும் என மொத்தம் ரூ 44 கோடியே 5 லட்சம் மதிப்பில் பணிகள் முடிவுற்றுள்ளது.

மேலும் அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.78 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 பணிகள் ரூ.24 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டிலும், மூலதன மானிய நிதியின் கீழ் 1 பணி ரூ.4 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலும், விடுபட்ட இடங்களுக்கான பாதாளச்சாக்கடை பணியானது ரூ.29 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டிலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 3 பணிகள் ரூ.ஒரு கோடியே 99 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ 137 கோடியே 82 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 4 ஆண்டு காலத்தில் ரூ 181 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளன.

மேலும், நடப்பு நிதி ஆண்டிற்கு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 86 எண்ணிக்கையிலான சாலைகளை ரூ.8 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2025-26ன் கீழ் ரூ.ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் குளங்கள் மேம்பாடு, ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாடு, ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம்பாடு மற்றும் ரூ.ஒரு கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி என மொத்தம் ரூ 17 கோடியே 31 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறவுள்ளது.

நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு மட்டும் 4 ஆண்டு காலத்தில் ரூ 199 கோடியே 18 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் இருந்து வரும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லு£ர் நகராட்சிகளுக்கும் மற்றும் 7 பேரூராட்சிகளுக்கும் என 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளதுடன் மேலும் பல பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மன்னார்குடி நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன், திருவாரூர் நகராட்சி துணை தலைவர் அகிலாசந்திரசேகர்,பணிநியமன குழு உறுப்பினர் பிரகாஷ், நகராடசி கவுன்சிலர்கள் செந்தில், சங்கர், அசோகன், ரஜினிசின்னா, ஒன்றிய குழு முன்னாள் தலைவர் புலிவலம் தேவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகராட்சி கமிஷ்னர் தாமோதரன் நன்றி கூறினார்.

The post திருவாரூர் நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.181 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article