திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

3 months ago 22

திருவாரூர்,

பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை திருவாரூருக்கு வந்தார். அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் உள்ள மூலவர் தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பித்தனர். பின்னர், அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அவர் கோவிலில் உள்ள பிற சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார்.

Read Entire Article