திருவாரூர் அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை

2 months ago 19
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சோனாப்பேட்டை கிராமத்தில், பெண் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்து விட்டு தலைமறைவான கந்துவட்டி ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். காந்தி என்பவர் கடன் கொடுத்தவர்களிடம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கந்துவட்டி வசூலித்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சோனாப்பேட்டையை சேர்ந்த 55 வயது பெண்மணி இந்துமதி 9 லட்சம் கடன்வாங்கி வட்டியுடன் சேர்த்து 20 லட்சமாக திருப்பிக் கொடுத்து கடனை அடைத்துள்ளார். ஆனால் கடன்பத்திரத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்த காந்தி, டிராக்டருடன் வந்து இந்துமதியின் மருமகன் வாங்கியிருந்த புதிய காரை சேதப்படுத்தியதுடன் இந்துமதி மீதும் டிராக்டரை மோதி ஏற்றி கொன்று விட்டு தப்பியோடிவிட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article