திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு

4 hours ago 1

திருவாரூர்: திருவாரூர் ரயில் நிலையத்தில் திருத்துறைப்பூண்டி செல்லும் ரயில்வே தண்டவாளம் அருகே யார்டு பகுதி உள்ளது. இங்கு பாராமரிப்பு பணிக்காக ரயில் இன்ஜின்கள் நிறுத்தப்படும். பராமரிப்பு முடிந்த பிறகு இங்கிருந்து ரயில் இன்ஜின்கள் சரக்குகள் ஏற்றிய பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்நிலையில் பேரளம்-காரைக்கால் இடையே நடந்து வரும் புதிய ரயில் பாதை பணிக்காக 12 பெட்டிகளில் ஜல்லிக்கற்கள் ஏற்றிக்ெகாண்டு சரக்கு ரயில் பேரளத்துக்கு நேற்று காலை 7.55 மணி அளவில் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் இன்ஜின் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி சிறிது தூரம் வரை சென்றது.

இதையடுத்து ரயிலை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தினார். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் வேறு இன்ஜின் பொருத்தப்பட்டு சரக்கு ரயில் மீண்டும் பேரளம் புறப்பட்டது. தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில் இன்ஜினை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்காக திருச்சியில் இருந்து மீட்பு ரயில் கொண்டு வரப்பட்டு தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து காலை 7:55 மணியளவில் திருவாரூர் ரயில் நிலையத்திற்குள் வரவேண்டிய அகஸ்தியம்பள்ளி- திருவாரூர் ரயில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இதேபோன்று திருவாரூரில் இருந்து காலை 8.15 மணி அளவில் மயிலாடுதுறை செல்லும் ரயிலையும் அகஸ்தியன் பள்ளி ரயில் பயணிகள் பிடிக்க முடியாமல் தவித்தனர். திருவாரூரில் இருந்து வழக்கமாக காலை 8.40 மணி அளவில் பட்டுக்கோட்டை செல்ல வேண்டிய ரயிலும் ஒரு மணி நேரம் தாமதமாக 9.40 மணியளவில் சென்றது.

The post திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article