சென்னை,
சென்னை திருவான்மியூர் திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் ஓவியா (3 வயது). சம்பவத்தன்று சிறுமி ஓவியாவை குளிப்பாட்டுவதற்காக ஏழுமலையின் மனைவி, வாளியில் வெந்நீரை ஊற்றி வைத்து விட்டு, சோப்பு, துண்டு எடுக்க சென்றார்.
அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஓவியா, வெந்நீர் இருந்த வாளியை பிடித்து இழுத்ததில் சிறுமி மீது வெந்நீர் கொட்டியது. ஓவியாவின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காயங்களுடன் வலியால் துடித்த குழந்தையை, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஓவியா நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள்.