திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை ரூ.2,100 கோடி மதிப்பில் 4.2 கி.மீ. நீளத்துக்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை | தமிழக பட்ஜெட் 2025

3 hours ago 2

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: பு​ராதனக் கட்​டிடங்​களை பழமை மாறாமல் புதுப்​பிக்​கும் நோக்​கோடு, சென்னை பல்​கலைக்​கழக மெரினா வளாகத்​தில் உள்ள கீழைக் கலை​யியல் ஆய்வு நிறுவன புராதனக் கட்​டிடம், ராணிப்​பேட்​டை​யில் உள்ள தேசிங்கு ராஜா ராணி நினை​வகம், கோவை​யில் உள்ள தமிழ்​நாடு வேளாண் பல்​கலைக்​கழக ஆராய்ச்சி நிலை​யம், திருச்சி ராணி மங்​கம்​மாள் கோட்டை வளாக அலு​வல​கங்​கள், தூத்​துக்​குடி மாவட்​டம் எட்​டையபுரம் நகரில் உள்ள பார​தி​யார் இல்​லம் உள்​ளிட்ட 17 புராதனக் கட்​டிடங்​கள் ரூ.150 கோடி மதிப்​பீட்​டில் புதுப்​பிக்​கப்​படும். இந்த வரவு-செலவு திட்ட மதிப்​பீடு​களில் பொதுப்​பணித் துறைக்கு ரூ.2,457 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

சென்​னை, கிழக்கு கடற்​கரை சாலை​யில் திரு​வான்​மியூரில் இருந்து உத்​தணடி வரை 14.2 கி.மீ. நீளத்​துக்கு 4 வழித்தட உயர்​மட்ட சாலை ரூ.2,100 கோடி மதிப்​பில் தமிழ்​நாடு மாநில நெடுஞ்​சாலைகள் ஆணை​யத்​தின் மூலம் அமைக்​கப்​படும். செய்​யார் தொழிற்​பூங்​கா​வில் இருந்து உற்​பத்தி செய்​யப்​படும் பொருட்​களை வெளி​நாடு​களில் சந்​தைப்​படுத்த ஏது​வாக, ரூ.250 கோடி செல​வில் ஒரகடம்​-செய்​யார் தொழில் வழித்தட திட்​டத்​தின் முதற்​கட்​டப் பணி​கள் நடப்​பாண்​டில் மேற்​கொள்​ளப்​படும்.

Read Entire Article