நட்சத்திரங்கள்;
பலன்கள்;
பரிகாரங்கள்…
கால புருஷனுக்கு ஆறாவது வரக்கூடிய நட்சத்திரம் இந்த திருவாதிரை ஆகும். இந்த நட்சத்திரம் ஒரு பிரமிப்பான நட்சத்திரம் ஆகும். உபஜெய ஸ்தானம் என்ற பாவமாகிய மிதுனத்தில் உள்ள முதல் நட்சத்திரம் ஆகும். சிவபெருமானின் நட்சத்திரம் ஆகும். நடராஜ பெருமானின் நட்சத்திரமாக
உள்ளது. இந்த நட்சத்திரன் பெயரை திரு + ஆ + திரை என்று பொருள்படும்படி பொருள் கொள்ளுதல் அவசியம். இங்கு திரு என்பது உயர்த்துதலையும் சிறப்பையும் குறிக்கிறது. ஆ என்பது நமது ஆன்மாவைக் குறிக்கிறது. திரை என்பது உலக மாயைகளால் ஏற்படும் மறைவைக் குறிக்கிறது. உலகத்தில் உள்ள மாயை களால் திரு என்ற ஆன்மாவை உணராத மறைவுத் தன்மையை இந்த நட்சத்திரம் நமக்கு உணர்த்துகிறது.
திருவாதிரை நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் இறை,செங்கை,சடை, மூதிரை, யாழ்,வில் ஆகியன… வடமொழியில் ஆருத்ரா என்று பொருள். இந்த நட்சத்திரம் வைரம் போன்றும் நீர்த்துளி போன்றும் காட்சியளிக்கிறது.
திருவாதிரை – விருட்சம் : செங்கருங்காலி
திருவாதிரை – யோனி : நாய்
திருவாதிரை – பட்சி : சிட்டுக் குருவி
திருவாதிரை – மலர் : வில்வப்பூ
திருவாதிரை – சின்னம் : வைரம்
திருவாதிரை – அதிபதி : ராகு
திருவாதிரை – தேவதை : சிவன்
திருவாதிரை – கணம் : மனுஷ்ச கணம்
திருவாதிரை புராணம்
இது வழி வழியாக சொல்லப்படும் கதையாகும். காவிரிபூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தான். சாதுவன் ஆதிரை என்ற பெண்ணை திருமணம் செய்து அவளுடன் 2 மற்றும் 3 ஆண்டுகள் வாழ்க்கை நடத்தி வந்தான். இவன் ஆடல், பாடல் கலைகளில் நாட்டமுடையவனாக இருந்தான். ஆகவே, இவனுக்கு ஆடல், பாடலில் நளினமாக இருந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த நடன மங்கைக்கு சாதுவனின் பொருளின் மீதே கவனமிருந்தது. சாதுவனின் பொருள் குறைந்ததும். பின்பு, சாதுவனைவிட்டு அந்த நடன மங்கை விலகிப் போனாள்.தன் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்வால் அவன் வீடு செல்லவில்லை. பின்பு, மீண்டும் பொருள் ஈட்டுவதற்கு வங்க தேசத்தை நோக்கி கப்பலில் பயணிக்கலானான்.அப்பொழுது, பெரும் புயலால் கப்பல் கவிழ்ந்து அனைவரும் கடலில் முழ்கினர். சாதுவன் கப்பலின் உடைந்த பாகத்தில் ஏறி உதவி தேடினான். மனைவி ஆதிரையோ கணவன் எங்கிருந்தாலும் நலமுடன் இருக்க வேண்டும் என்று சிவபெருமானை தினமும் பிரார்த்தனை செய்து வந்தாள். அவளின் வழிபாடு சாதுவனை காப்பாற்றியது.வெகுநாட்கள் சாதுவன் வராததால் ஆதிரை கணவன் இறந்து விட்டான் என நினைத்து அழுதாள். பின்பு, தானும் தீக்கிரையாக முடிவு செய்து, அடுத்த பிறவியிலும் சாதுவனே எனக்கு கணவனாக வரவேண்டும் என சிவபெருமானை வேண்டிக் கொண்டு தீயில் குதிக்க முற்பட்டாள். அச்சமயம், வானில் இருந்து ஓர் அசரீரி வந்தது ‘‘ஆதிரையே! உன் கணவன் மீண்டும் வருவான்’’ என கேட்டது. சாதுவன் கடலில் இருந்து தப்பி அரண்மனையில் சேர்க்கப்பட்டான். பின்பு, சாதுவன் தன் சொந்த ஊரான காவிரிபூம்பட்டினத்திற்கு சென்று மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். அப்படிப்பட்ட கற்புக்கரசியான ஆதிரையே சிவபெருமானின் அருளால்நட்சத்திரமாக ஒளிர்கிறாள்.
பொதுப்பலன்கள்
முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றியை நோக்கி பயணிக்கும் திறன் கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பிரமாண்டமாக சிந்திக்கும் மனம் படைத்தவர்கள். மிக கடினமான வேலையை சிறப்பாகச் செய்யக்கூடிய திறமை உடையவர்கள். சொன்னதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தோற்றுப் போனதில்லை என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளும் குணம் இவர்களிடம். கோபமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் உணர்ச்சிப் பிளம்பாக கொப்பளித்து விடுவார்கள்.இந்த நட்சத்திரத்தில் பிறந்த சிலருக்கு ஆரம்ப கல்வியை சரியாக படிக்காமல் விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் மனம் போகும் வாய்ப்புகள் உண்டாகும். ஆகவே, கவனத்துடன் படிப்பது நன்மையளிக்கும். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்து சக்தி உங்களை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டே இருக்கும். வங்கி மற்றும் கணக்காளர் போன்ற துறைகளில் படிக்கும்பொழுது நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
தொழில்
புது முயற்சிகள் எடுத்துதொழில் செய்ய முற்படுவீர்கள். ஏதேனும் உத்யோகத்தில் இருந்தால் தலைமைப் பதவியை நோக்கி முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் செய்யும் ெதாழில் புதுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். அதை கண்டறிந்து வெற்றியும் காண்பீர்கள்.
வியாபார யோகமும் யுக்தியும் உங்களுக்கு உண்டு. ஆகவே, மார்க்கெட்டிங் செய்வதில் கைதேர்ந்தவர்களை நாடி வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள்.
ஆரோக்கியம்
இந்த நட்சத்திரக்காரர்கள் உணவு விஷயத்தில கவனம் தேவை. இவர்களுக்கு பித்தம் தொடர்பான வியாதிகள் வரக்கூடும். இரவில் எண்ணெய் தொடர்பான உணவுகளை உட்கொள்வதால், அஜீரணக் கோளாறுகள் உண்டாகும் ஆகவே, கவனம் தேவை.
திருவாதிரை வேதை நட்சத்திரம்
வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தும் நட்சத்திரமாகும். அந்த வகையில் திருவோணம், சதயம், ஹஸ்தம், ரோகிணி ஆகும்.
திருவாதிரை நட்சத்திர பரிகாரம்
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரில் உள்ள வன பத்ரகாளியை சிவப்பு நிற வஸ்திரம் கொடுத்து அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இக்கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. முங்கிலே வேலியாக கொண்டு இந்தக்கோயில் அமைந்துள்ளது.
திருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதறுமா?
சுவிஸ் – ஜப்பானிய கூட்டு விண்வெளி ஆய்வாளர்கள் திருவாதிரை நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய பீட்டல்கியூசு (Betelgeuse) 60 ஒளி ஆண்டுகளை கடந்து விட்டதால் மங்கிய ஒளியில் உள்ளது எனவும் வெடிக்குமா எனவு ஐயத்துடன் யூகம் எழுப்பியுள்ளனர்.
கலாவதி
The post திருவாதிரை appeared first on Dinakaran.