திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து, சேலையூர் வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம், பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவபெருமாள் கோயிலில் தற்போது சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் பகுதியில் உள்ள மடம் ஒன்றில் உள்ள வேத பாடசாலை மாணவர்களான ஹரிஹரன்(16), வெங்கட்ராமன்(17), வீரராகவன்(24) ஆகிய 3 பேர் வேத பாராயணம் படித்து வந்தனர்.