திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளுக்கு ₹64 லட்சம் மதிப்பீட்டில் 28 மின்கலன் வண்டிகளை ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார். திருவள்ளூர் ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 10 ஊராட்சிகளுக்கு ₹64.40 லட்சம் மதிப்பில் 28 மின் கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். மேலாளர் (திட்டம்) ஊரம்மாள், ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் கலந்துகொண்டு 8 மின் கலன் வண்டிகளை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் 26 வேப்பம்பட்டு சதா பாஸ்கரன், புல்லரம்பாக்கம் தமிழ்வாணன், கிளம்பாக்கம் சொக்கலிங்கம், அயத்தூர் தேவி தாஸ், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் டிஎம்எஸ்.வேலு, விமலா குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மின்கலன் வண்டியில் ஊராட்சியில் சேரும் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க ஏதுவாக வெவ்வெறு நிறத்தில் பிளாஸ்டிக் டிரம்கள் பொருத்தப்பட்டிருந்தன.
The post திருவள்ளூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளுக்கு மின்கலன் வண்டிகள் appeared first on Dinakaran.