திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் ஸ்ரீ பாசூரம்மன் மற்றும் ஸ்ரீ கங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்ததையடுத்து, நேற்றுமுன்தினம் காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு முதல் நாள் கிராம தேவதை வழிபாடு, மங்கள வாத்தியம், எஜமான சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 2ம் நாள் தீபசண்டீ, நவாவரணம், சண்டீ பாராயணம், தம்பதி பூஜை, மங்கள வாத்தியம், கும்பலங்காரம், கலச புறப்பாடு முதல் காலயாக வேள்வி நிகழ்ச்சி நடைபெற்றது. 3ம் நாள் காலை மங்கள வாத்தியம், இரண்டாம் கால யாக வேள்வி, மாலை விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 4ம் நாளான நேற்று முன்தினம் காலை மங்கள வாத்தியம், நான்காம் கால யாகம் கலச புறப்பாடு நிகழ்ச்சியும், ஸ்ரீ கங்கை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் விநாயகர், முருகர் விமான கோபுரம், விநாயகர் முதலிய பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணியளவில் ஸ்ரீ பாசூரம்மனுக்கு கும்பாபிஷேகமும், மகா அபிஷேகம், தீபாரதனை மற்றும் எஜமான உற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாசூரம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல ஆபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.