திருவண்ணாமலையில் குரு பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

4 hours ago 2

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலுக்கு வருகை தரும் பெரும்பாலான பக்தர்கள் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் நடந்து கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்தநிலையில், குரு பவுர்ணமி எனப்படும் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 2.33 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்ல தொடங்கினர். தொடர்ந்து நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் குறைந்த அளவிலான பக்தர்களே கிரிவலம் சென்றனர். பின்னர் மாலைக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. குரு பவுர்ணமி இன்று அதிகாலை 3.08 மணியுடன் நிறைவடைந்தது. இருப்பினும் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று வருகின்றனர்.

முன்னதாக் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக அவர்கள் தெரிவித்தனர்.

Read Entire Article