திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண் உயிரிழப்பு

1 week ago 7

திருவண்ணாமலை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பழனி மகள் உஷாராணி (வயது 58). இவர் கடந்த 11-ந் தேதி அவரது உறவினர்களுடன் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். கிரிவல பக்தர்கள் கூட்டத்தில் உஷாராணி அவரது உறவினர்களிடம் இருந்து தவறி சென்றார். வழக்கமாக அவர் கிரிவலம் வந்து செல்வதால் எந்தவித பதற்றமும் இன்றி அவரது உறவினர்கள் வீடு திரும்பினர்.

இதற்கிடையில் கிரிவலம் சென்ற உஷாராணி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள சிட்கோ பஸ் டிப்போ அருகில் மயங்கி விழுந்து கிடந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசார் உதவியுடன் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு உஷாராணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரது சகோதரர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிவலம் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article