திருவண்ணாமலை: திருவண்ணாமலை எனவே, இந்த மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒரு கோடி பனை விதைகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதையொட்டி, பனைமர விதைகள் நடும் திட்டத்தின் தொடக்கமாக, மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 10 லட்சத்து 5 ஆயிரத்து 700 பனைமர விதைகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஒருங்கிணைத்திருந்தார். அதற்காக, அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் ேவலைத் திட்ட தொழிலாளர்கள் சுமார் 2.20 லட்சம் பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியம், காட்டாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை பகுதியில், பனைமர விதைகள் நடும் பணிைய, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.ேவலு தொடங்கி வைத்தார். அப்போது, நூறு நாள் வேலை தொழிலாளர்களுடன் இணைந்து பனை விதைகளை ஏரிக்கரை பகுதியில் அமைச்சர் நட்டார்.
இதில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, டிஆர்ஓ ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, ஊராட்சி உதவி இயக்குநர் சையத்பயாஸ்அகமது, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் த.ரமணன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், பிடிஓக்கள் பரமேஸ்வரன், பிரித்திவிராஜ், உதவி திட்ட அலுவலர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் ெதாடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் 1,153 இடங்களில் பனைமர விதைகள் நடும் பணி நடந்தது. அந்தந்த ஊராட்சிககளில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் பனை விதைகளை நட்டனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10.05 லட்சம் பனை விதைகள் நட்டிருப்பது புதிய முயற்சியாகவும் சாதனையாகவும் அமைந்திருக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது: ஒரு பனை மரம் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு நீரை சேமிக்கும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவியாக இருக்கும். புயல் காற்றை தாங்கக்கூடிய தன்மை கொண்டது. எந்த கால நிலைகளிலும் வளரக்கூடியது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை மரங்களை நட்டு பராமரிப்பது, இந்த மண்ணின் வளத்துக்கு பயன்தரும்.
எனவே, மாவட்டம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை படிப்படியாக நட இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். முதற்கட்டமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 10,05,700 பனை விதைகள் நடப்பட்டது. இப்பணியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்திருக்கிறார். மாவட்டம் முழுவதும் 2.20 லட்சம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய சாதனை ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடவு appeared first on Dinakaran.