திருவண்ணாமலை மலை உச்சியில் 7-வது நாளாக சுடர் விட்டு எரியும் மகா தீபம்

3 hours ago 2

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 13-ம் தேதி கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்கள், பிறமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் மழை மற்றும் பலத்த காற்றிலும் இன்று 7-வது நாளாக சுடர் விட்டு எரிந்து வருகிறது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Read Entire Article