திருவண்ணாமலை: தொழிலாளி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

4 hours ago 1

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் ஈ.பி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40), தொழிலாளி. இவர், குடும்பத்துடன் நேற்று முன்தினம் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு சென்றார். கிரிவலம் முடித்துவிட்டு அங்கிருந்து நேற்று காலை தங்கராஜ் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்து 30 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என்ற போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read Entire Article