திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணிவரை நடந்தது. உண்டியலில் ₹3 கோடியே 79லட்சத்து 20 ஆயிரத்து 354யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
மேலும், 225 கிராம் தங்கம், 1765 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டு கரன்சிகளும்இருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உண்டியல் காணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அதன்படி, பங்குனி மாத உண்டியல் காணிக்கை ₹3.79 கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை ₹3.79 கோடி appeared first on Dinakaran.