திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

1 month ago 5

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலகப்பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 13-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

விழாவையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இந்த ஆண்டு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டு உள்ளார்.

அதனைத்தொடர்ந்து கிரிவலப்பாதையில் செங்கம் சாலை சந்திப்புப் பகுதியில் தொடங்கி காஞ்சி சாலை சந்திப்பு வரையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது அவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த இளநீர் கடைகள், டீக்கடைகள், சோடா கடைகள் போன்றவற்றை அகற்றினர்.

 

Read Entire Article