பணியிடங்கள் விவரம்:
1. தட்டச்சர்: 1 இடம். சம்பளம்: ரூ.18,500-58,600. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் முதுநிலை தேர்ச்சி மற்றும் கம்ப்யூட்டரில் அறிவுத் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
2. காவலர்: 70 இடங்கள் ( ஆண்-60, பெண்கள்-10). சம்பளம்: ரூ.15,900-50,400.
3. கூர்க்கா: 2 இடங்கள். சம்பளம்: ரூ.15,900-50,400.
4. ஏவலாள்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.10,000-31,500.
5. உபகோவில் பெருக்குபவர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.10,000-31,500.
6. கால்நடை பராமரிப்பாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.10,000-31,500.
7. உப கோவில் காவலர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.11,600-36,800.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8. திருமஞ்சனம்: 3 இடங்கள். சம்பளம்: ரூ.11,600-36,800.
9. ஸ்தானீகம்: 10 இடங்கள். சம்பளம்: ரூ.10,000-31,500.
10. ஓடல்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.15,900-50,400.
11. தாளம்: 3 இடங்கள். சம்பளம்: ரூ.18,500- 58,600.
12. ஆகம ஆசிரியர்: 1 இடம். சம்பளம்: ரூ.35,900-1,13,500.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏதாவதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளிகளிலிருந்து சம்பந்தப்பட்ட பணிக்குரிய பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி எண்: 12க்கு மட்டும் வேதாகம பாடசாலையில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் வயது 18 லிருந்து 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in அல்லது https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2025.
The post திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 99 இடங்கள் appeared first on Dinakaran.