திருமலை: ஆந்திராவை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 2 ஆண்கள், 3 பெண்கள், 3 குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். திருமலையில் உள்ள கோவிந்த நிலையம் ஓய்வறையில் அறை எடுத்து தங்கினர். பின்னர் சுவாமி தரிசனம் செய்து விட்டு நேற்று அறையை காலி செய்து, ஊருக்கு புறப்பட்டனர்.
இதற்காக அவர்கள் அங்குள்ள லிப்டில் கீழே இறங்கினர். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் லிப்ட் பாதியில் நின்று விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அறை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர்.
அவர்கள், மின்சாரம் வரும் வரை எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அலட்சியமாக கூறினார்களாம். இதனால் லிப்டில் சிக்கியவர்கள் என்ன செய்தென தெரியாமல் தவித்தனர். இதையறிந்த தேவஸ்தான அதிகாரிகள், லிப்ட் தொழில்நுட்ப உதவியாளரை வரவழைத்து சுமார் அரை மணி நேரம் போராடி அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தால் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
The post திருமலையில் லிப்டில் சிக்கி தவித்த பக்தர்கள் appeared first on Dinakaran.