திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதியில் வைத்து பலாத்காரம்: காதலன் மீது காதலி பகீர் புகார்

1 day ago 3


அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர், நேற்றுமுன்தினம் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது; அண்ணாநகரில் வசித்துவரும் நான், அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறேன். இதே நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. கடந்த 2023ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். திருமணம் செய்துகொள்வதாக கூறி தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதன்பிறகு என்னிடம் சரியாக பேசுவதில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டால் போனை எடுத்து பேசுவது கிடையாது.

தனியாக சந்தித்து எதற்காக பேச மறுக்கிறாய் என்று கேட்டபோது அந்த வாலிபர் உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றார். அத்துடன் எனக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே, என்னை இனிமேல் எந்த நேரத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்றார். காதலித்து திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக மனவேதனை ஏற்படுத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து காதலன் வீட்டிற்கு சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

The post திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதியில் வைத்து பலாத்காரம்: காதலன் மீது காதலி பகீர் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article