
சென்னை,
சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. இவர் பிரஜுனுடன் நடித்த சின்ன தம்பி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.தொடர்ந்து, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்றார். அப்போது இந்நிகழ்ச்சியின் பங்கேற்ற சக போட்டியாளரான நடன கலைஞர் அமீருடன் நட்பு ஏற்பட்டது. இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது பாவனியை ஒருதலைபட்சமாக அமீர் காதலித்து வந்தார்.
பிக் பாஸ் வீட்டில் அமீரின் காதலை ஏற்காத பாவ்னி, வெளியே வந்தவுடன் இவர்களின் நட்பு காதலாக மாறியது.தொடர்ந்து, 3 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்து இருந்தனர். சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர். நடிகை பாவ்னி சமீபத்தில் 'ஓம் காளி ஜெய் காளி' என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார். விமல் உடனான பாவனியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இருவரும் காதலித்து வந்தநிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பாவனி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு திருமண தேதியை அறிவித்தார். திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் இருவரின் காதலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைத்தது. இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.
சின்ன திரை நடிகை பாவ்னி, திருமணத்துக்குப் பிறகான தனது கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார். இதனையொட்டி உணர்வுப்பூர்வமாக அவர் பதிவிட்டுள்ளார்.திருமணத்துக்கு முன்பு காதலர்களாக பல பிறந்தநாள்களை இருவரும் கொண்டாடியிருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு கணவன் - மனைவியாக முதல்முறை பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதலர்களான நடிகை பாவ்னி - நடன இயக்குநர் அமீர் ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் சிறந்த தம்பதிகளாக மாறியுள்ளனர்.

அமீரின் பிறந்தநாளையொட்டி பாவ்னிபதிவிட்டுள்ளதாவது, "என்னுடைய காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்னுடைய கணவராக, அம்மாவாக, அப்பாவாக, மருத்துவராக, அடிப்படையில் தனிப்பட்ட சமையல் கலைஞராக இருப்பதற்கு நன்றிகள். நீ ஒரு முழு நேரக் குழந்தையை திருமணம் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளாய். என்றும் எனக்குள் இருப்பாயாக" எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.