இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கூட்டமைப்பு தலைவர் கடும் எச்சரிக்கை

8 hours ago 2

வாஷிங்டன்,

உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், புதின் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதால் போர் நிறுத்தத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனால், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு எதிராக அதிக வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவும் அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது.இந்த மசோதா நிறைவேறினால், ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனாவுக்கு 500 சதவீத வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, நேட்டோ கூட்டமைப்பின் தலைவரும் தற்போது இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.அமெரிக்க எம்.பி.க்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ செயலாளர் மார்க் ருட்டே கூறியதாவது: "அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா தீவிரமாக எடுக்க மறுக்கிறது. எனவே, அந்த நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குவதை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் தொடர்ந்தால், அந்த நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிப்பேன்," என்றார்.

Read Entire Article