
சென்னை,
பிரபல பின்னணி பாடகர் அரிஜித் சிங்கின் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்து வெளியாகி இருக்கிறது. நட்சத்திர பாடகரான அவர் விரைவில் இயக்குனராக அறிமுகமாக தயாராகி உள்ளார். ஒரு ஜங்கிள் அட்வென்ச்சர் திரில்லர் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் ஸ்கிரிப்டை அரிஜித் சிங் மற்றும் அவரது மனைவி கோயல் எழுதியுள்ளதாகவும், மகாவீர் ஜெயின் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் நடிகர்களை தேர்வு செய்யும் பணி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.