திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நல பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

3 months ago 13

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள பரீத்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்பால் சிங் என்பவரது மகன் விபின் குமாரின் திருமணம் நேற்று நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டவர்களில் சுமார் 40 பேருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போலீசார், உடல்நல பாதிப்பு ஏற்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிலர் மேல்சிகிச்சைக்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article