திருமண மண்டபத்தில் ரூ.4.20 லட்சம் மொய் பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

3 hours ago 2

சென்னை: வேளச்சேரியை சேர்ந்தவர் ஆகாஷ்குமார் (32). இவரது தங்கையின் திருமணம் நேற்று எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. வரவேறப்பு நிகழ்ச்சியில் வந்த மொய் பணம் ரூ.4 லட்சத்தை ஆகாஷ்குமார் தம்பி நேர்த்திக் கையில் வைத்திருந்தார். பின்னர், அந்த பணத்தை அருகில் உள்ள மேஜையில் வைத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மொய் பணம் மாயமாகி இருந்தது. அதேபோல் மணமகன் வீட்டின் மொய் பணம் ரூ.20 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து உடனே எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பார்த்த போது, 2 பேர் பணத்தை திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்பி சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், ஆட்டோ பதிவு எண்ணை வைத்து ரூ.4.20 லட்சத்துடன் தப்பி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருமண மண்டபத்தில் ரூ.4.20 லட்சம் மொய் பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article