திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்: திமுக தொகுதி பொறுப்பாளர் ஆய்வு

2 months ago 10

 

திருமங்கலம், நவ. 18: திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை, திமுக தொகுதி பொறுப்பாளர் அலாவுதீன் ஆய்வு செய்தார். தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் அறிவுறுத்தலின்படி, மதுரை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருமங்கலம் தொகுதியில் திருமங்கலம் நகர், ஒன்றியம், கள்ளிக்குடி ஒன்றியம், டி.கல்லுப்பட்டி ஒன்றியம், டி,.கல்லுப்பட்டி பேரூர், பேரையூர் பேரூர் ஆகிய பகுதிகளில் திமுகவினர் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொகுதி பொறுப்பாளர் அலாவுதீன் கட்சியினருடன் இணைந்து பூத் வாரியாக நேரில் சென்று வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு வருகிறார். இதன்படி நேற்று இரண்டாம் நாளாக திருமங்கலம் தெற்கு ஒன்றியம், கள்ளிக்குடி வடக்கு, தெற்கு ஒன்றியங்களை சேர்ந்த பல்வேறு பூத்துகளில் நேரில் அவர் ஆய்வு செய்தார்.

இவருடன் ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், தனசேகர், பாண்டியன், பேரூர் செயலாளர் வருசைமுகமது, இளைஞரணி அமைப்பாளர் சாதிக், முருகானந்தம், முத்துக்குரு, பரணி, சிவா அழகர், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

The post திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்: திமுக தொகுதி பொறுப்பாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article