திருமங்கலத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

3 weeks ago 5

 

திருமங்கலம், ஜன. 11: திருமங்கலத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. திருமங்கலம் போக்குவரத்துகாவல் பிரிவு சார்பில் 36வது சாலை பாதுகாப்பு விழாவையொட்டி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நேற்று பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருமங்கலம் ஏஎஸ்பி அன்சூல் நாகர் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.

சாலை விதிகளை மதிப்போம், விலைமதிப்பற்ற உயிர்களை காப்போம், தலைகவசம் உயிர்கவசம், செல்போன் பேசியடி வாகனங்களை ஓட்டாதீர் போன்ற விழிப்புணர்வு என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் திருமங்கலம் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் பள்ளி தலைமையாசிரியர் ஜெயசாந்தினி, போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ பாரதி மற்றும் போக்குவரத்து போலீசாரும் பங்கேற்றனர்.

The post திருமங்கலத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article