திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம்..

3 months ago 16
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 29ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர்கொலை செய்யப்பட்ட வழக்கில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். சேமலைகவுண்டம்பாளையத்தில் வசித்த தெய்வசிகாமணி-அலமேலு தம்பதி, மகன் செந்தில்குமார் ஆகியோர் கொல்லப்பட்டு 12 நாட்களாகியும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், 14 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த செந்தில்குமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்ததாகவும், நஷ்டம் காரணமாக அதனை கைவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஒரு வருடத்திற்கு முன்பு தனது தோட்டத்தை குத்தகைக்கு விட்டது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்நபருக்கு சொந்தமான பத்திரம் செந்தில்குமார் வீட்டில் இருந்ததாகவும் அதனை எடுப்பதற்காக கொலை நிகழ்த்தப்பட்டதா எனவும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article